திருகோணமலை – தோப்பூர் இக்பால் நகர் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் – இக்பால் நகர் பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மிதிவெடியே வெடித்து குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய ஹாபிஸ் நளீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
செட்டிகுளத்தில் உழுந்து பயிர்செய்கையை சேதப்படுத்தி காணிகளை கையகப்படுத்தும் வனவளத்துறை!