
ஓய்வு பெற்ற பிரபாகரன் அதிபருக்கான சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடை பெற்றது!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் நீண்டகாலமாக அதிபராக கடமையாற்றி பாடசாலை வளர்ச்சியில் பங்காற்றிய ஓய்வு பெற்றுச் சென்ற வி. பிரபாகரன் அதிபருக்கான சேவை நலன் பாரட்டு விழா கல்லூரி அதிபர் கலையரசன் தலைமையில் இன்று (12.12.2021) சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் கதாநாயகன் ஓய்வு நிலை அதிபர் பிரபாகரன் அவரது குடும்பத்தார்கள், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன், கால்நடை அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பாஸில்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் பங்குபற்றி இருந்தனர்.
இந் நிகழ்வின் போது ஓய்வு பெற்ற அதிபர் பிரபாகரன் அவர்களது நாமம் தாங்கிய “பிரபாபம்” எனும் நூல் வெளியீட்டு வைக்கப்பட்ட மை சிறப்பம்சமாகும்.