இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினைக்கு சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டியே தீர்வாக முடியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பில் தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து மேற்கொண்ட சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டியை என்றோ ஒரு நாள் அடைந்தே தீருவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.
தமிழர்களின் நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வரையில், சட்டப் புத்தகத்தில் இருக்கும் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள் என்பதே தமது கோரிக்கை.
அத்துடன், 13ஆவது திருத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.