
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர்-அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீஸ் நளீம் (15வயது) எனத் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
ஆடுகளின் உணவுக்காக இலை, குழைகள் வெட்டச் சென்ற சிறுவன் புதர் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த கைக்குண்டு கத்தி பட்டு வெடித்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.சிறுவனின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
