அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்தும் விளையாடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், எரிவாயு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் பல தடவைகள் கேள்வி எழுப்பிய போதிலும் அரசாங்கம் இந்த விடயங்களை உதாசீனம் செய்து வருகின்றது.
சில விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை மாற்றிக் கொடுக்கவில்லை.
எரிவாயு பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றது எனவும், மக்கள் வீடுகளில் குண்டுகளை வைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.