அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டணி பிளவுறும் வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், கூட்டணியொன்றை முன்னெடுத்து செல்வதா? இல்லையா? என்பது அதனை ஏற்படுத்தியவர்களிடமே பொறுப்பாக உள்ளது.
அதனை சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டணி பிளவுபடுவதற்கான வாய்ப்புள்ளது.
தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்வாறு தகவல் அறியும் சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.