யுகதனவி மின் உற்பத்தி நிலையம் குறித்த உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள காரணத்தினால் அதில் சாதகமான திருத்தங்களை செய்ய முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய யுகதனவி உடன்படிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள காரணத்தினால் சாதகமான திருத்தங்கள் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை.
இந்த உடன்படிக்கையை முன்கொண்டு செல்வதா இல்லையா என்பதனை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டும்.
அமைச்சரவை அனுமதி வழங்காவிட்டால் இந்த உடன்படிக்கை செல்லுபடியாகாது.
மேலும் எவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் நீதிமன்றம் அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு உடன்படிக்கை செல்லுபடியாகாது என தீர்மானம் எடுத்தால் அப்போதும் இந்த உடன்படிக்கை செல்லுபடியாகாது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் கட்சிகள் 21ம் திகதி கூட்டு தீர்மானத்தில் கைச்சாத்திட முடிவு!