சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம் மன்னார் மீனவர்களிற்கு எதிர்வரும் வியாழக் கிழமை நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன தூதரகத்தால் வழங்கப்படவுள்ள இந்த நிவாரண விநியோகத்திற்காக 15 ஆம் திகதி சினத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகின்றார்.
அவ்வாறு வரும் சினத் தூதுவருக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 15ஆம் திகதி இரவு உணவு விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 16ஆம் திகதி யாழில் 800 மீனவர்களிற்கு வலை வழங்கப்படுவதோடு 2 ஆயிரம் மீனவர்களிற்கு நிவாரணப் பொதி வழங்கப்பட உள்ளது.
இதேநேரம் மன்னார் மாவட்ட மீனவர்களில் 700 பேருக்கு நிவாரணப் பொதிகளும் 150 பேருக்கு வலைகளும் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மீன்பிடி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் நிவாரண வலைகள் தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியாகவும், நிவாரணப் பொதிகள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியும், உடையவை எனக் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.