தமிழர் பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில் காணப்படுகின்ற ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்,நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய இராயேந்திரன் இராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய, களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் பார்வையிட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அதன்பின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *