
விசேட வர்த்தமானி வெளியீடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்குரிய விசேட அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
நாடாளுமன்றம் அடுத்த மாதம் 11 ஆம் திகதி கூட சபாநாயகரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென ஜனவரி 18 வரை அதனை ஒத்திவைத்துள்ளார் ஜனாதிபதி.
ஜனாதிபதியின் இந்த அதிரடி தீரமானத்தின் பின்னணியில் முக்கிய பல அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
