கல்லுண்டாய் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
