
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் பயணித்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொண்டுள்ள குறித்த பயணத்தின் அடிப்படையில் அவர் ஓரிரு தினங்கள் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கமான உடல் நல மருத்துவ சோதனைகளுக்காக அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
