கிளிநொச்சியில் சமூகஅக்கறை கொண்ட ஒருவராக பலராலும் பார்க்கப்பட்ட குகன் எனும் நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் தாயும் தம்பியும் இரட்டைக் கொலை செய்யப்பட்ட போது நீதி கிடைக்கவில்லை என ஏங்கி கதறியழுத அவர் ஒருநாள் எமக்கெல்லாம் விடிவுகாலம் வரும் என நம்பியிருந்த நிலையில், அவர் உயிரிழந்தமை பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அதோடு துயிலும் இல்லங்களில் விளக்கேற்ற வாய்ப்பு கிடைத்த நாட்களில் கூடவே இருந்து ஓர் சிறந்த தமிழ் பற்றாளராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
Advertisement
இந்நிலையில் அவரது மறைவு பெரும் சோகத்தையும் துயரத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.