
காரைதீவு பிரதேச சபை பாதீட்டு வாக்கெடுப்பு வெற்றி!

காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை தவிசாளர் கி.ஜெயசிறிலினால் இன்று(13) 46 வது சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.
இவ்வரவு செலவு திட்டத்தினை த. தே. கூ உறுப்பினர்கள் தவிசாளர் ஜெயசிறில் உட்பட ஐவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் உட்பட உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ச.நேசராஜா, த.மோகனதாஸ், சி.ஜெயராணி, ச.சிசிகுமார், என்.எம்.றணீஸ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
வரவு செலவிற்கு எதிராக உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏனைய உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர், எம்.ஜலீல், கே.குமாரசிறி, கே. ஜெயதாசன் ஆகியோர் வாக்களித்தனர்.
இன்றைய அமர்வுஇடம்பெற்ற சபை மண்டபத்துக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தவிசாளர் ஜெயசிறிலின் கருத்து…
இரு சமூகத்தை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்திருந்தார்கள். இந்த வேற்றி மக்களின் வெற்றி. இந்த வாக்கெடுப்பு இருண்டு இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது.
சதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றார்.