புத்தளம் – நவகத்தேகம மொரகஹவெல பகுதியில் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.
குறித்த யானை நேற்று இரவு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது நிகாவரெட்டிய மிருக வைத்தியர் இசுருவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த யானை 30 வயது மதிக்கதக்கதாக காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
காணியின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் நாளை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலை கண்ணீர் வடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கனவு காணுகிறது எதிர்க்கட்சி! மகிந்தானந்த