உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தற்போதைய நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் எம். அனுர திஸாநாயக்க ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஜனாதிபதியின் அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ .ஜயசுந்தரவின் பதவி விலகலுடன் இந்த புதிய நியமனம் இடம்பெறவுள்ளது.
பி. பீ. ஜயசுந்தர நிதி அமைச்சின் சிரேஷ்ட செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ . ஜயசுந்தரவின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இதனையடுத்தே ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ஜயசுந்தர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.