நாட்டின் எந்த பகுதிகளிலும் மின்சார விநியோகத்தில் இன்று முதல் தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் மின்சார விநியோகம் தடை ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது