கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
எனினும், கொரோனா தோற்றாளர்களின் இறப்பு எண்ணிக்கை சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளதுஇ என்றார்.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விரைவில் நெருங்கி வருவதால், அந்த நேரத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது மற்றும் சுகாதார சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிப்பது முக்கியம் என குறிப்பிட்டார்.
அவ்வாறு இல்லையெனில் அவர்கள் மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.