
இந்தோனேஷிய கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி 9 மணிக்கு புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் Maumere நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.