கிளிநொச்சியில் தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி- கண்டாவளை – கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில், குழி ஒன்றை வெட்டியபோது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையறிந்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்கு விரைந்து, அங்கிருந்த துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
குறித்த குழியினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.