முகமாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்களை நீதவான் பார்வையிட்டார்.
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்களை நீதவான் பார்வையிட்டார்.
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில், ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி உட்பட்ட வெடி பொருட்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வரிச் சீருடை எச்சங்களும், மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் காணப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில், குறித்த பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பல மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படும் அடையாள எச்சங்களும் சீருடைகளும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.