மணிவண்ணனை கட்சிக்காரணங்களுக்காக பதவியில் இருந்து வெளியேற்றாதீர்கள்; உறுப்பினர்களிடம் விக்கி எம்பி பணிவான கோரிக்கை

யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன் மாற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால்த்தான் இவ்வாறான சிந்தனைகள் மேலோங்குகின்றன.

வெறும் கட்சி சார்பான முரண்பாடுகளால் ஒரு தகுதி வாய்ந்த நகர பிதாவை இழக்க தாங்கள் இடமளிக்க கூடாது.

நெருக்கடியான இந்த கால கட்டத்தில் அறிவு, ஆளுமை, அதிகாரம் கொண்டவர்களை பதவி இழக்கச் செய்தால் அரசாங்கத்தின் கரவான நடவடிக்கைகளைக் கண்டிக்க முடியாமல் போய்விடும்.

எனவே யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் தயவு செய்து பதவியில் இருக்கும் நகரபிதாவை கட்சிக் காரணங்களுக்காக வெளியேற்ற எத்தனிக்காதீர்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *