கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும்
ஒப்பந்தம் தேசத்தை காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம
வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.
உடன்படிக்கையை கைச்சாத்திட அனுமதித்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இலங்கையின் எதிர்காலத்துக்கு
துரோகம் இழைத்த குற்றவாளிகள் என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இந்த உடன்படிக்கை இரகசியமாக கைச்சாத்திடப்பட்டமைக்கு தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளதாக வீரக்கொடி தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்னும் செல்லுபடியாகும் என்பதால், சட்டமா அதிபரிடம் இருந்து மறைத்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்கள் ஜனாதிபதியினால் வெளிக் கொணரப்படவேண்டும், பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி கோரிக்கை விடுத்தார்.