மருதமுனை ஹியூமன் லின்க் விசேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
2007 ஆம் ஆண்டில் மருதமுனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் மத்திய நிலையம் மாணவர்களுக்கான கற்றல் செயல்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது.
இதில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த வகுப்பறை கட்டடம் சகல வசதிகளையும் கொண்டதாக 15 மில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வகுப்பறை கட்டடத்திற்கான அனுசரணையை குவைத் நாட்டின் சகோதரி ஆயிஷா யூசுப் வழங்கியுள்ளார்கள்.
ரஹ்மா சர்வதேச சங்கம், மேர்ஸி லங்கா நிறுவனம் என்பனவற்றின் ஒத்துழைப்போடு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்வில் இந்திய உபகண்ட காரியாலய தலைமை அதிகாரியும் சர்வதேச ரஹ்மா அமைப்பின் பிரதிநிதியுமான அஷ்செய்க் மொஹமட் அல்-கஸ்ஸார், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் உஸ்தாத், அப்துல்லாஹ் முனீர், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் சட்ட ஆலோசகரும் திட்ட முகாமையாளருமான அஷ்செய்க் .என்.எம்.அப்துல் முஜீப், திட்டமிடல் முகாமையாளர் அஷ்செய்க் ஹஸன் ஸியாத், திட்டமிடல் பணிப்பாளர் அஷ்செய்க் .எம்.ஆர்.எம்.முனாஸ், கல்விப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் ஏ. பௌசுல் ரஹ்மான் உட்பட ஹியூமன் லின்ங் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.