ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா..? திணறும் நுகர்வோர்

கண்டி – கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக உயர்ந்தது.

நகர வீதிகளில் நடைபாதை வியாபாரிகளின் சில்லறை வியாபாரம் தொடர்பில் மெனிக்கும்புர பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரிடம் வினவியபோதுஇ ​​பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலை 680 – 700 ரூபாவாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இடைத்தரகர்கள் விலையை அதிகரிப்பதால் நுகர்வோர் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளைஇ சந்தையில் மரக்கறி உட்பட அனைத்து பொருட்களுக்கும் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *