இனத்தின் இருப்பே கேள்விக் குறியாகும்போது வாய் மூடியிருந்த விக்கினேஸ்வரன் தனது பதவியை காத்தவருக்காக வாய் திறந்துள்ளார்! இ.ஆனல்ட்

இனத்தின் இருப்பே கேள்விக் குறியாகும் சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடையும்போது வாய் மூடியிருந்த முதல்வர் தனது பதவியை காத்தவருக்காக வாய் திறந்துள்ளார் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.

மேலும், சபை தோற்கடித்து, கட்சி ரீதியாக பிரிந்து நின்றால் தமிழ் இனத்திடம் இருந்தே பறிபோகும் நிலமை இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையில் அவரது அணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்து தோற்கடிக்கும்போது உறக்கத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இன்றுதான் விழித்துள்ளார்.

இவற்றின் அடிப்படையில் இவரது அறிக்கையின் நோக்கம் தனது பதவி பறிபோகும் நிலமை ஏற்பட்டபோது தனக்காக வீதியில் இறங்கி கத்தியமைக்கான பிரதி உபகாரம் என்பது மிகத் தெளிவானது.

இவரது எண்ணத்திற்கும் கருத்திற்கும் அவரது கட்சியே செவி சாய்க்காதபோது அடுத்தவர்களிற்கு வழிகாட்ட முற்படக்கூடாது.

முன்பு 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தே தற்போதைய முதல்வர் பதவிக்கு வரும்போது வாய் திறக்கவில்லை.

இதேநேரம் 45 பேரைக்கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை தகுதியற்றவர்கள் என்று கருத்து கூறும் அதிகாரம் உண்டா என்பதனை நீதியசராக இருந்தவருக்கு நாம் கூறவேண்டிய அவசியம் கிடையாது அல்லது இவர் தகுதி அற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை மட்டுமே விடுவார் என நாம் கூறலாமா. எனவே இவரது அறிக்கை தொடர்பில் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை கிடையாது என்றார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதில் தனியார் துறையினர் தயக்கம்! துமிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *