பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று எதிர்ப்பு பேரணியொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் சட்டவிரோதம் மற்றும் அதன் ஊழல், தன்னிச்சையான நடவடிக்கைகளால் இலங்கை மின்சார சபை மேலும் பாதாளத்துக்கு செல்வதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஊழியர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் தாம் முன்வைத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதே இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



