தமிழ்த் தேசிய அரசியலை நீக்கும் செயற்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதேவேளை ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.