அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், தமிழர்களுக்கு சிங்கள தலைமைகளால் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்பதையே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ காட்டுகிறது என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது தமிழர் தாயகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும்.
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் எங்களின் குழந்தைகளைக் கண்டுபிடிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் இன்று 1763 நாளாகும்.
மே 2009க்குப் பிறகு, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி மூன், மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்தபோது, ராஜபக்ச 13 க்கு அதிகமான அதிகாரப் பகிர்வை உறுதியளித்தார், ராஜபக்ச அதை 13 பிளஸ் என்று அழைத்தார்.
போரில் தமிழர்களுக்கு எதிராக ஆதரவைப் பெற, சர்வதேச சமூகத்திடம் இருந்து, குறிப்பாக இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களிடம் இருந்து, தமிழர்களுக்கு 13 பிளஸ் வழங்கப்படும் என்று ராஜபக்சே உறுதியளித்திருந்தார்.
ஜுன் 2003 இல் நிறுவப்பட்ட இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு உறுப்பினர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2009 இல், சோனியா காந்தி கூட வடகிழக்கு தமிழர்களுக்கு 13 பிளஸ் கிடைக்கும் என்று தமிழக தமிழர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழர்களுக்கு 13 பிளஸ் அல்லது 13 கூட கொடுக்க சிங்களவர்கள் மறுத்ததை இது காட்டுகிறது. இப்போது சிங்களவர்களின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’, அது 13 அல்லது 13 பிளஸ் அல்ல.
இது சிங்கள இனத்தையும் பௌத்தத்தையும் வளர்க்கும் வலுவான இனவாதக் கொள்கையாகும். இது தமிழர்களையும் அவர்களின் மதங்களையும் புறக்கணிக்கிறது.
தற்போதைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற இந்த பௌத்த இனக் கொள்கையானது, தமிழர்கள் எதற்கும் சிங்களவர்களை நம்பக்கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தமிழர்களுக்கு சிங்கள தலைமைகளால் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்பதையே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ காட்டுகிறது.
தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்றும் அமெரிக்காவையும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ உந்து பண்ணும் என மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளில் மீண்டும் திருத்தம்!