பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருவதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக சட்டமா அதிபர் விசேட மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், 2018ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் நடத்தப்பட்ட பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு என்னையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அழைக்கவில்லை.
இது சம்பந்தமாக அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோவிடம் விசாரித்த போது, எம்மை அழைப்பதை முன்னாள் ஜனாதிபதி விரும்பவில்லை என தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் அப்படி தாக்குதல் நடக்க போகிறது என்ற தகவல் எனக்கு கிடைக்கவில்லை. அந்த காலத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியில் பணியாற்றவும் இடமளிக்கப்படவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடக்கும் போது நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தார். அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கவில்லை.
இதனால், இராணுவத்தினரை அழைக்கும் கட்டளை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருந்தது. பாதுகாப்புச் செயலாளருக்கு அந்த அதிகாரம் இருக்கவில்லை.
விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்தியின் கேள்விக்கு பதிலளித்துள்ள ருவான் விஜேவர்தன, புலனாய்வு அதிகாரிகள் தகவல்களை தனக்கு தகவல்களை வழங்கியதில்லை எனவும் இந்த தாக்குதல் நடக்கும் வரை அப்படியான தாக்குதல் பற்றிய தகவல் தனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை நிராகரிக்க நடவடிக்கை!