வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை துறைசார்ந்த அடிப்படையில் முன்னெடுப்பதிலும், அதனை துரிதமாக முன்கொண்டு செல்வதிலும் புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்றைய மாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை செயற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் வடக்கில் உள்ள மக்கள் பெரிதும் பல்வேறு நன்மைகளை அடையும் நிலையேற்படும் என கூட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண அமைச்சின் சிரேஸ்ட நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கில் முன்னொருபோதும் இடம்பெறாத அளவிற்கு ஆளுநரின் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் துரித கதியில் அடைமானத்தை அடையும் அளவிற்கு அதிகாரிகள் பணிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இக் கூட்டத்தை மையப்படுத்தியதாக, புதிய ஆண்டில் 2022 அதன் முன்னேற்றங்கள் துரிதமாக ஆராயப்பட்டு முன்கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த ஆண்டில் இருந்து வடக்கு மாகாண அமைச்சுக்களின் துறைவாரியான நிதி நிலைமை, வேலை முன்னேற்றம், தேக்க நிலையில் உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.