இனப்பிரச்சினைக்கு அடியே அரச காணிகள் பகிர்ந்தளிப்பதுதான்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

காணிப்பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை. மிகமுக்கியமான பிரச்சினை இனப்பிரச்சினைக்கு அடியே அரச காணிகள் பகிர்ந்தளிப்பதுதான் இதுதான் பிரச்சினை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிணக்குகள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்கள். வனவளத்திணைக்களம், மற்றும் ஏனைய அரச திணைக்களங்களால் மக்களின் பூர்வீக வயல் நிலங்கள் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இங்கு வாழ்கின்ற மக்களின் நீண்டகால காணிப்பிணக்குகளை காணிக்கான உரிமையினை பெற்றுக்கொடுக்கக் காணிகளை வழங்கவேண்டும், அதன் பின்னர் உள்ள காணிகளை லீசிங்கில் வழங்கவேண்டும்.

ஆனால் அரச திணைக்களம் லீசிங்கில் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் காணிகளை வழங்குகின்றது, சாதாரண மக்களின் காணிப்பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் காணி பிணக்குகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

இந்த காணி பிணக்கிற்குக் கொள்கை வகுத்தல் ஒன்று செய்யவேண்டும். அதனை நாங்கள் செய்வோம். தீர்ப்பதற்கான நடவடிக்கையினை எடுப்போம். யாருக்கு முன்னுரித்து எனத் தீர்மானிக்கவேண்டும்.

இவ்வாறான விடயங்களைக் கொள்கை வகுப்பாகச் செய்து வடக்கு மாகாணத்தில் உள்ள எல்லா காணிப் பிரச்சனைக்கும் பொதுவாக அமுல்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடையத்தினையும் ஆவணப்படுத்தி கொள்கை வகுப்பிற்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

இதற்கு ஒரு குழுவினை நியமித்து விடயங்களை நிரல்படுத்தி அதனை எங்களுக்குத் தந்தால் நாங்கள் கொள்கையினை வகுக்கமுடியும். அரசகாணி முதல் இருந்த கொள்கை வந்து வித்தியாசம், ஆனால் அரச காணியில் பயிர் செய்பவர்களுக்கு உரித்து இருக்கின்றது.

சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறான பிரச்சினை வழக்கு வைத்து இடைக்கால உத்தரவும் எடுத்துள்ளோம். தொல்பொருள் திணைக்களத்தின் பிரச்சினை. இப்போது சட்டத்தினை உபயோகிக்கும் விதம் மாறியுள்ளது.

அது மத்திய அரசாங்கத்திடம் இருந்துதான் வருகின்றது. அதற்காகத்தான் அந்த அதிகாரம் சட்டப்படி மத்திய அரசாங்கத்தில் இல்லை, மாகாண அரசிடம்தான் இருக்கின்றது என கூறினோம். இருக்கின்ற அதிகாரத்தினை உறுதிப்படுத்து இது எங்கள் அதிகாரம் என்று நாங்கள் கொள்கையினை வகுக்கவேண்டும்.

இது ஒரு பெரிய பிரச்சினை மிகமுக்கியமான பிரச்சினை, இனப்பிரச்சினைக்கு அடியே அரச காணிகள் பகிர்ந்தளிப்பதுதான். இதுதான் பிரச்சினை. 1957ஆம் ஆண்டு, 1965ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலும் அதுதான் பிரதானமாக வைக்கப்பட்டது.

எனவே, காணிதான் ஒரு அடிப்படை பிரச்சினை, இது சாதாரண பிரச்சினை இல்லை உங்கள் ஒத்துழைப்புடன் உங்கள் சவால்களை நிரல்படுத்தி தந்தால் நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்வோம், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் ம.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாண முன்னால் விவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னால் உறுப்பினர்களான றிப்ஹான் பதியூதீன், ஆ.புவனேஸ்வரன், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

புத்தளம் தள வைத்தியசாலையில் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு திறந்துவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *