நத்தார் தினத்தை இலக்காகக் கொண்டு சாதாரண ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுக்கு மதுபானங்களை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
எனினும் சுற்றுலா சபையினால் அங்கிகரிக்கப்பட்ட ஹோட்டல் அறைகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதோடு இது இவ்வருடம் மட்டுமன்றி இதற்கு முன்னரும் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Advertisement
எனினும் கிறிஸ்மஸ் தினத்தில் மதுபானங்களை விநியோகிப்பதற்கு அனுமதி கோரி சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதெவேளை நாட்டில் வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.