அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுக்கள் காட்டுப் பாதைகளில் வண்ணக் கொடிகளைக் கட்டி அரசாங்கத்தை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஒருங்கிணைப்புக் காரியாலயத்தை தம்புத்தேகமவில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அரசாங்க வேலைத்திட்டத்தில் பிரச்சினைகள் காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நிறுவன விடயங்கள் அரசின் பங்காளிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
தேசிய வளங்களை விற்பனை செய்வதை எதிர்ப்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிராக சகோதரத்துவ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் வகையிலான சுற்று நிருபம் வெளியிடப்படும்! கல்வி அமைச்சர்