வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என தெரிய வருகின்றது.
இலங்கையில் 25 மற்றும் 29 வயதிற்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர் என புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். ஒட்டுமொத்தமாக உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.
அரசாங்கம் அடுத்த வருடம் வேலை வாய்ப்பை வழங்காது என்று அறிவித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற்சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.