தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 வயது மகளும் தந்தையும் பலியாகியுள்ள நிலையில், மூவர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த 39 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால் நாடு மீண்டும் பிரிவினைவாதத்திற்குள் தள்ளப்படும்! ஞானசார தேரர்