மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
லொறி குறுக்கு வழியில் நின்றதால், விபத்தில் ரயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
ரயில் கடவையை மீறி லொறி பயணிக்க முட்பட்டதினாலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.