ஒமிக்ரான் வைரஸ் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியாது. எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒமிக்ரான் புறழ்வு உலகெங்கிலும் வேகமாக பரவிவருகின்றது. குறித்த வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், இலங்கையில் பரவாது என்ற நூறு வீத உத்தரவாதத்தை எம்மால் வழங்கமுடியாது.
எனவே, அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதிலிருந்து தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் மூன்றாவது தடுப்பூசியை பெறவேண்டியது கட்டாயம்.
அவ்வாறு பெறுவதன்மூலம் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதுடன், சமூகத்தில் பரவுக் விகிதத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.
ஏனெனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், வெளியேறும் வைரஸ் அளவு குறைவாகவே இருக்கும் என்றார்.