தனது ஐந்து பிள்ளைகளை தென்னந்தோப்பில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்றதாகக் கூறப்படும் தாயை விளக்கமறியலில் வைக்க நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வாரியபொல நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. வாரியபொல, அம்பகடவர பகுதியில் தென்னந்தோப்பில் இருந்த பாதுகாப்பு வீட்டில் வசித்த 30 வயதான 5 பிள்ளைகளின் தாய், 36 வயதான அவரது காதலன் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளை கொடூரமாக நடத்தியமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினர்.
Advertisement
அதேவேளை தென்னந்தோப்பில் இரு நாட்கள் உணவின்றி தவித்த பிள்ளைகளை ஊர்மக்கள் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகின்றது.