
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைக்கவுள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாகவும் செய்துள்ளதாகவும் அறிய முடிகின்றது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதே நிலைப்பாடுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இன்றைய விவாதத்தின்போது முடிவு செய்யப்படும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் பின்னர்தான் ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் தெரிவித்துள்ளது.
45 உறுப்பினர்கள் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் இரண்டாவது முறையாக கொண்டுவரப்படும் வரவு செலவுட் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபை நேரடியாக அரசாங்கத்திற்கு கீழ் சென்றுவிடும்.
எனவே தமிழ் மக்களின் நலன் கருதி, அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதிகள் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சி பேதங்களை மறந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.