வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக சபாரட்ணம் செல்வேந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தவிசாளர் தேர்வில் சுயேட்சை குழுவை சேர்ந்த சபாரட்ணம் செல்வேந்திரா மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஆதரவாக 17 வாக்குகள் பெற்று தவிசாளராக தேர்வாகியுள்ளார்.
குறித்த வாக்கெடுப்பில் சபாரட்ணம் செல்வேந்திராவிற்கு ஆதரவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 07 வாக்குகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணையினரின் 02 வாக்குகளும், சுயேட்சை குழுவின் 04 வாக்குகளும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 02 வாக்குகளும், சுதந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தலா ஒவ்வொரு வாக்கும் அளித்திருந்தன.
குறித்த வாக்கெடுப்பில் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர் பா.ஜெகன் வெளிநடப்பு செய்திருந்தவேளை, ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.