காலி – ரன்தம்பே இராணுவக் கல்லூரியில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கம்பளை, டஸ்பியா தோட்டத்தைச் சேர்ந்த 21 வயது இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ரன்தம்பே இராணுவப் பயிற்சி பாடசாலை அதிகாரிகளால் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ முகாமில் உள்ள பல அதிகாரிகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.