இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும் தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி அமையத்தின் உதவிகள் பற்றியும் பேசப்பட்டதாக யாழ்.போதனா வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.