கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்பாணத்திலிருந்து ஓட்டமாவடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்காக இறந்தவர்களின் உறவினர்களிடம் 85,000 ரூபா வசூலிக்கப்படுவதாக ஜே.வி.பி. மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய வடக்கில் உரிய காணியை அரசாங்கம் அடையாளம் காண வேண்டும். இல்லையேல் சடலங்களை அரச செலவில் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.