கிளிநொச்சி – பரந்தன் சிவபுரம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தின் திறப்பு விழா நிகழ்வும் காணி உறுதிப்பத்திரம் மற்றும் நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.
பரந்தன் சிவபுரம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் பரந்தன் சிவபுரம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேற்படி பொது மண்டபம் இன்று காலை 8 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டதுடன் காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்டட பயனாளிகளுக்கான இழப்பீட்டுத் தொகை என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், கல்விப் பொதுத் தராதர சாதரண தரத்தில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற சிவபுரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சரால் தலா ஐயாயிரம் ரூபா காசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவநாதன் பரந்தன் பங்கு தந்தை மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


ஆனைக்கோட்டையில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் வீட்டில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!