கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினையே கத்திக்குத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு ஆளுநரின் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!