இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு யாழிற்கு வருகை தந்த சீன அதிகாரிகள், பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.