கிண்ணியா – மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது
இன்று காலை பெண்ணொருவர் சமைத்து கொண்டிருந்த நிலையில், திடீரென சமையல் அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
எனினும், இச் சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு கிண்ணியா பொலிஸார் வருகை தந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டனர் .
அண்மைக் காலமாக எரிவாயு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்று வரும் நிலையில் குறித்த எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.