பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறை தடுப்பு தொடர்பில் இளைஞர்களுக்கான செயலமர்வொன்று இன்று (15) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
கிராமிய பொருளாதார சமூக அபிவிருத்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் வன்முறைகள் ,பாலியல் துஷ்பிரயோகம் சைப கிரைம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
வளவாளராக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.