யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் இன்று காலை சாவகச்சேரி ரயில் தண்டவாளத்தில் இருந்தவரை மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி, கச்சாய் வீதி புகையிரதக் கடவைக்கும், கந்தையா வீதி புகையிரதக் கடவைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ் என்பவரே படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு காது கேளாமை காரணமாகவே இவ் விபத்து நேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.